பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 193

மூளையின் பணிகள்

மூளையின் முக்கியமான பணிகளாக நாம் மூன்றைக் கூறலாம்.

1. செய்திகளை மூளை ஏற்றுக்கொள்கிறது (Receives). 2. கட்டளைகளை அனுப்புகிறது (Instructs).

3. செய்திகளை சேகரித்து, வைத்துக்கொண்டு (Stores) அறிவுப்புப் பணிகளைத் தொடர்கிறது.

மூளையின் பாகங்கள்

மூன்று பாகங்களாக, மூளை பிரிக்கப்பட்டிருக்கிறது.

அெைl முறையே, பெருமூளை சிறுமூளை, முகுளம் என்று பெயர்க்ளைப் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு பிரிவின் இடத்தையும், அதனதன் சிறப்பான பணி பற்றியும் தெரிந்து கொள்வோம்.

/. 6o3&pomom (Cerebrum)

இது மூளையின் மற்ற பாகங்களைவிடப் பெரியது. அதிகமான இடப்பரப்பு கொண்டதாக விளங்குகிறது. மொத்தப் பரப்பில் ஏறத்தாழ 80 சதவிகிதம் இதன் பரப்பளவு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெருமூளையானது, கபாலப் பெட்டியின் மேற் புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக் கொண்டு அமைந்துள்ளது.

இதில் நிறைய நெளிவுகளும், மடிப்புகளும் (Fold) இருப்பதால்தான், இதன் பரப்பளவு அதிகமாக இருக்கிறது.