பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதன் மடிப்புகள் மிகவும் கனம் உடையதாக அமைந் திருக்கின்றன. இந்த மடிப்புக்களை நீட்டி விரித்து விட்டால், இதன் பரப்பளவு 5சதுரஅடி இருக்கும் என்று கணக்கிட்டிருக் கின்றார்கள். - -

மற்ற மிருகங்களைவிட, மனித மூளையில் நெளிவும் மடிப்புக்களும் நிறைய இருப்பதால்தான், மனிதன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவனாக விளங்குகின்றான்.

பெருமூளையின் மத்தியில் உள்ள பெரிய பிளவானது, இதை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கிறது. இதன் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பாகங்கள் உள்ளன.

பெரு மூளையின் பகுதியானது, உட்பகுதியில் வெண்மையாகவும் வெளிப்பகுதியில் சாம்பல் நிறம் கொண்டதாகவும் தோற்றமளிக்கிறது.

பெருமூளையின் பணிகள்

1. பெருமூளை மனிதனிடையே அறிவிற்கு அடித்தள மாக இருக்கிறது. நம்முடைய சிந்தனை, நினைவுகள், மற்றும் நாம் நினைத்துச் செயல்படக் கூடிய எல்லாகாரியங்களுக்கும் பெருமூளையே காரணமாக இருந்து உதவுகிறது.

2. பெருமூளையின் பல்வேறு பாகங்கள், பல்வேறு பட்ட உணர்ச்சிகளையும், அதற்கேற்றவாறு பல்வேறுபட்ட தொழில்களையும் பாங்காகக் கவனித்துக் கொள்கின்றது.

3. முக்கியமான ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய்; தோல் போன்ற பகுதிகளிலிருந்து, வருகின்ற நரம்புகள் நேரடியாக அல்லது தண்டு வடத்தின் மூலமாக, பெரு மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பார்வை நரம்புகள் பெருமூளையின் பின்புறத்தில் இருக்கின்றன.