பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

முகுளத்தின் வேலைகள்

தண்டு வடத்தைப் போலவே, முகுளத்திற்கும் இரண்டு பணிகள் உண்டு. ஒன்று அனிச்சைச் செயல். மற்றொன்று, நரம்பு உந்துதல்களைக் கடத்துவதாகும்.

தண்டு வடத்திற்கும் மூளைக்கும் நடுவில், செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஒரு தூதுவன் போல, முகுளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சுவாசவேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல்லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே நடைபெறகின்ற தன்னிச்சைச் செயல் களாகும்.

இப்படிப்பட்டத் தன்னிச்சையாக இயங்குகிற தானியங்

கும் தசைகளுக்கு, முகுளத்திலிருந்து தான் கட்டளைகள் கிடைக்கின்றன.

முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும்.

முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சுவிடலும், இருதயத்துடிப்பும் தடைபட்டுப்போய், மரணமே நிகழலாம்.

3Gor(36/c_0 (Spinal cord)

அமைப்பு: தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும் பின் நடுவிலுள்ள முள்ளெலும் புக் கால்வாய் வழியாகக் கீழ் நோக்கிச் செல்கிறது. நன்றாக நெகிழக்கூடிய 33 முள்ளெலும் புகளால் தண்டுவடம் காக்கப்படுகிறது. -

மூளையைப் போலவே, தண்டுவடத்திற்கும் மூன்று உறைகள் உண்டு.