பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பிரிந்துசெல்கின்றன. இத்தகைய நரம்புகளையும், அவற்றின் கிளைகளையும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று நாம் அழைக்கலாம்.

உள்ஸ்ரீப்புக்கள், சுரப்பிகள், மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கு, நரம்பூட்டம் அளிக்கும் பகுதிக்கு, தன்னிச்சை நரம்பு மண்டலம் என்று பெயர்.

நரம்பு செல்கள், அவற்றின் துணுக்குகள், நரம்பு இழை ஆகியவை தன்னிச்சைநரம்பு மண்டலத்தில் அடங்குகின்றன.

தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகள், மூளையிலிருந்தும் தண்டுவடத்திலிருந்தும் துவங்குகின்றன. அவை நரம்பு முடிச்சின் முன் இழைகள் என்று அழைக்கப் படுகின்றன. அவை கபால நரம்புகள், மற்றும் தண்டுவட நரம்புகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைந்து, தன்னிச்சை நரம்பு முடிச்சு செல்களுக்குள் செல்கின்றன.

அங்கேயுள்ள நரம்பு முடிச்சு, பின் இழைகள் என்று அழைக்கப்படுகின்ற நரம்பு இழைகள், உள்ஸ்ரீப்புகளுக்குச்

செல்கின்றன.

இந்தத் தன்னிச்சை மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன.

1. Lisa fossibly&air (Sympathetic Nerves)

2.51am ori’s Lifical soutbl/5air (Parasympathetic Nerves)

பரிவு நரம்புகள்

தண்டு வடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டு வடத்திலிருந்து, அதனதன் தண்டு வட