பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 2O5

நரம்புகள்ாக வெளி வந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன.

வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும் புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந் துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப்படுகின்றன.

பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்றும் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்கங்களில் பங்கு பெறுவதாக அமைந்துள்ளன.

பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப்பகுதியின் உள்ஸ்ரீப்புக்களுக்கும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன் தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணிர்சுரப்பிகள், கண்பாவையை விரிவடையச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன.

மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக்குழல், நுரையீரல் ஆகியவற்றிற்கு கிளைகளை அனுப்புகின்றன. கிளர்ந்தெழும் பணியை ஊக்குவிக்கின்றன. துணைப்பிரிவு பரிவு நரம்புகள்

மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப்பிரிவிலும் இவை காணப்படுகின்றன.

பரிவு நரம்புகளும், துணைப் பரிவு நரம்புகளும், உள்ஸ்ரீப்புக்களில் பலவிதமான் ஆதிக்கம் செலுத்திக் கட்டுப் படுத்துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலை களைச் செய்கின்றன.

உதாரணமாக இங்கே ஒரு குறிப்பைக் காண்போம். பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பாருங்கள். உமிழ்நீர் மற்றும் கண்ணிர் சுரப்பிகளின் சுரப்பு