பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங்குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. குடலின் அலைகின்ற அசைவு தாமதமாகிறது. இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள்தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது. -

ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலை யைப் பாருங்கள். கண்பாவை சுருங்குகிறது. உமிழ் நீர், மற்றும் கண்ணிர் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலாகிறது. இரைப்பை சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்குகின்றன. உடலில் உஷண இழப்பு அதிகரிக்கிறது. - -

இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள் மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் நன்மையாகவே முடிகின்றது.

அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பெற்று, ஒரேஅமைப்பாக மாறி, ஒழுங்காகவும் சிறப்பாகவும் பணியாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது.

அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டலச் சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகின்றன. - - -

gGadgi (Neuron)

நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும்.

நியூரோன்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.