பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 19

இவ்வாறு, செல்லானது உடலின் அடிப்படை முக்கிய அம்சமாக இருந்து, எல்லாவிதமான வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் உதவுகிறது. உயிராக இருந்து உலாவருகிறது. இனி செல்லின் சிறப்பான பேரமைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். திசுக்களும் அவற்றின் பிரிவுகளும் (Tissues)

மனித உடலின் உறுப் புக்கள் ஒவ்வொன்றும், பலவகைப் பட்டத் திசுக்களால் ஆனதாகும். திசுக்கள் என்பவை செல்களின் கூட்டத்தினால் உருவாக்கப்படுகின்றன.

ஆகவே, ஒவ்வொரு திசுவும், திட்டவட்டமான அமைப்பும் செயல் முறையும் கொண்டதாகவும், ஒர் உயிர்ப் புள்ள மண்டலமாகவும் இயங்குகிறது.

உயிரினத்தின் ஒப்பற்ற அமைப்பான இந்தத் திசுக்கள் ஐந்து வகைகளாகப் பிரிந்து, இயங்குகின்றன.

1. GT1?335u; 33 (Epithelial Tissue) 2. Q)anaori'il 1533 (Connective Tissue) 3. gang; 64. (Muscle Tissue) 4. (BJubil 33 (Nerve Tissue) 5. Qug a (Blood Tissue) இனி, ஒவ்வொரு திசுவின் ஒப்பற்ற அமைப்பையும், உண்டாக்குகின்ற பணி சிறப்பையும் விரிவாகக் காண்போம்.

1. எபிதீலியத்திசு

அமைப்பு: எபிதீலியத்திசு பெரும்பாலும் செல்களால் ஆனது. இவை பல வடிவங்கள் கொண்டு விளங்குகின்றன. இவை அதிகமான அளவில், அடுக்குகளாகவே அமைந்திருக் கின்றன.