பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O8 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நரம்புத் திசுவின்செயல் தன்மையை, கடத்தும் தன்மை (Conductivity) arcirpit 3 pisu.

இதன் முக்கியம்: உணர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டுமென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். இதன் முழும்ை சேதாரமடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது.

இயக்க நரம்புகள் சேதடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றிருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகிவிடுகின்றன. உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப்பட்டு, சுரணையற்றுப் போகிறது.

நரம்பு மண்டலமும் உடற்பயிற்சிகளும்

1. உடற்பயிற்சிகளால் நரம்பு மண்டலம் உற்சாகம்

பெறுகிறது. நரம்புகள் நேர்த்தியும், நெகிழ்ச்சியும் கொண்டு, நிறைவாகச் செயல்படுகின்றன.

2. நரம்பு கோணிடில் தேகம் திகைத்துத் துவண்டுபோய் விடும் என்பார்கள். உடற்பயிற்சிகள் நரம்பு மண்டலத்திற்கு உற்ற துணையாக, உடனுதவும் தோழனாக உதவிக் கொண்டிருக்கின்றன.

3. நரம்புகள், தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்து கின்றன. தசைகள் யாவும், நரம்புகள் கொண்டு வந்து தருகிற கட்டளைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. கட்டளைகளைப் பெற்றதும் உடனடியாகச் செயல்படத் தொடங்குகின்றன. -

தசைகளும் நரம்புகளும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்படவும், திறமையாக இயங்கிவிடவும், தசைகளும் வலிமையாக இருந்தால் தான் முடியும். தசைகளுக்குத்