பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5 அங்குல நீளமும்; 2 முதல் 2% அங்குல அகலமும் கொண்ட வகையாக விளங்குகிறது.

கல்லீரல் வலது பக்கத்தில் இருப்பதால், வலது சிறு நீரகம், இடப்புற சிறு நீரகத்தை விட கொஞ்சம் தாழ்ந்து இருக்கிறது.

சிறுநீரகம் சிவப்பு நிறமாக உள்ளது. இதன் குழிந்த பாகம் ஹைலம் (Hium) என்று அழைக்கப்படுகிறது. இது

முதுகெலும்பை நோக்கி இருக்கிறது.

இந்த ஹைலப்பகுதியில், ஒரு சிரையும் தமணியும் உட்செல்கின்றன. ஹைலத்தின் வழியாக, சிறுநீர்க் குழாயானது நேராகக் கீழே வந்து, இடுப்புக்கு குழியில் உள்ள சிறுநீர்ப்பையை அடைகிறது. சிறுநீர்ப்பையிலிருந்து யூரித்ரா என்னும் சிறு நீர்ப்புறவழியாக சிறுநீர் வெளியே அகற்றப் படுகிறது. -

சிறுநீரும் சிறப்பும்

சிறுநீர் வெளிறிய மஞ்சள் நிறம் கொண்டது. சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணிரும், 5 சதவிகிதம் மற்றப்

பொருட்களும் உள்ளன.

சிறுநீரில் காணப்படும் பொருட்கள்: யூரியா, யூரிக் அமிலம், கிரியோடினின், ஹறிப்புரிக் அமிலம், சோடியம் குளோரைட் (உப்பு); கந்தக பாஸ்பர அமில உப்புக்கள், பொட்டாசியம் ஆக்ஸைடு போன்றவைகளாகும்.

சிறுநீர் பிரியும் அளவு: செய்கிற வேலை, சுற்றுப் புறத்தின் தட்ப வெப்ப நிலை, உணவின் அளவு, அதன் தன்மை, உட்கொண்டதண்ணிரின் அளவு போன்ற பலவற்றை வைத்தே அளவு மாறுபடுகின்றது.