பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 215

ஒரு மனிதனுக்கு 24 மணிநேரத்தில் 1% முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் பிரிகிறது. அதிலும், இரவு நேரத்தைவிட பகல் நேரத்தில் தான் அதிக அளவில் இருக்கிறது.

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளி வருவதால், சிறுநீர் பிரிதல் குறைவாகி விடும். மழைக்காலம் அல்லது குளிர் காலத்தில் வியர்வைக் கழிவு இல்லாத காரணத்தால், சிறுநீர் பிரிதல் அதிகமாகிவிடும்.

சிறுநீரில் சர்க்கரை: சிறுநீரில் சர்க்கரை காணப்படு வதை கிளைகோ சூரியா என்பார்கள். இந்த நிலை நீரிழிவு நோயில் காணப்படுகிறது. இன்சுலினை போதிய அளவில் கணையம் சுரக்காதபோது, சர்க்கரை வியாதி உண்டாகி விடுகிறது. -

அதிக அளவில் மாவுப் பொருட்கள் அடங்கிய

உணவினை உண்டால், தற்காலிகமாக, சர்க்கரையானது

சிறுநீரில் காணப்படும். சிறுநீரகத்தின் தோற்றம்

- சிறுநீரகம் ஒன்றை, குறுக்காக வெட்டிப்பார்க்கும் பொழுது, அதன் தோற்றமும் அமைப்பும் நன்றாகவே புலப்படும்.

(படம் பார்க்க), அந்தக் குறுக்குத் தோற்ற அமைப்பில் கார்டெக்ஸ், மேடுலா, பெல்விஸ், பிரமிட், சிறுநீரகப் பிளவு, (Hilus) சிறு நீரகக்குழி, சிறுநீரக அடிக்கிண்ணங்கள் (Renal Calyxes), சிறுநீரக வளைவு (Rena, Pelvis) போன்ற பகுதி களைக் காணலாம்.

( கடைசிப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது) இரத்தக் குழாய்களும் அவற்றின் குழல்களும்தான், சிறு நீரகத்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்

கின்றன.