பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தோலின் அடிப்பகுதியில் கொழுப்பு இருக்கிறது. இது ஆளுக்கு ஆள் அளவில். மாறுபடுகிறது. குறிப்பாக, ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமான கொழுப்பு காணப்படுகிறது.

தோலின் அடியில் தேங்கியுள்ள கொழுப்பு, ஒரு சேமிப்பு போஷாக்குப் பொருளாக இருந்து உதவுகிறது.

அடித்தோல் பகுதியில், இரத்தத் தந்துகிகள், வியர்வைச் சுரப்பிகள், தொடு உணர்ச்சி நரம்புகள், செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous glands), ldufii Qp< amrg;lb Jlb l 1 @)Llb, கொழுப்பு போன்றவைகள் காணப்படுகின்றன.

இனி, இவற்றின் தன்மைகளையும் உண்மைகளையும் காண்போம்.

(அ) வியர்வைச் சுரப்பிகள் (sweat glands)

தோலின் அடியின் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவை எண்ணிக்கை: ல் இரண்டு மில்லியன் சுரப்பிகளுக்கு மேல் இருக்கின்றன.

ஒவ்வொரு சுரப்பியும் ஒரு சுருள் குழலைப் போல அமைந்து, அவற்றின் கழிவுக் குழாய், தோலின் பரப்பில், ஒரு துவாரமாக வெளி வருகிறது.

தேகத்தில் உள்ள தோல் பகுதியில், உள்ளங்கை, பாதங்கள், நெற்றி போன்றவற்றில் தான் நிறைய வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. -

வியர்வைச் சுரப்பியைச் சுற்றிலும் இரத்தத் தந்துகிகள் செல்வதால், இரத்தத்திலிருந்து வியர்வையை வியர்வைச் சுரப்பி பிரித்தெடுத்து விடுகிறது. அங்கிருந்து வியர்வை யானது, வியர்வைக்குழாய்கள் வழியாக, தோலின் மேற்பரப்பை அடைகிறது.