பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 . - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கொண்டுவந்து விடுகின்றன. ஆதனால், அதிக வியர்வை ஏற்பட்டு விடுகிறது.

வியர்வை ஆவியாகும்போது, உடலின் வெப்பத்தையும் எடுத்துக் கொண்டு போவதால்தான், உடலின் உஷணம் குறைந்து போகிறது.

குளிர்காலத்தில், வெளிப்புற சூழ் நிலையில், வாயு மண்டலத்தில் உஷணம் குறைவாக இருக்கிறது. இதனால் தோலின் அடியில் இருக்கின்ற தந்துகிகள் விரியாமல், சுருங்கிக் கொள்கின்றன. ... “

தந்துகிகள் சுருக்கத்தால், இரத்தம் தோலுக்கு வருவதில்லை. அதனால், வியர்வையும் அதிகமாக உண்டாவதில்லை. அப்படி ஏற்பட்டாலும், குறைந்த அளவு வியர்வையே ஆவியாக வெளியேறுவதால், உடலின் வெப்பம் அப்படியே இருந்து கொள்கிறது.

ஆனால், குளிர்காலத்தில் அதிக அளவு சிறுநீர் பிரிந்து, உடலின் வெப்பத்தைக் காத்து நிற்கிறது.

தோலினால் ஏற்படும் நன்மைகள்

1. தேகத்தின் உள்ளே உள்ள உறுப்புக்களை தோல் பாதுகாக்கிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையின் தாக்குதல்களி லிருந்தும், தீய விளைவுகளிலிருந்தும் நன்கு பாதுகாக்கிறது. தோல் ஆரோக்கியமாக இருந்தால், எந்தவித பாக்டீரியாக் களும் உள்ளே நுழையவே முடியாது.

இது தோலின் பாதுகாப்புப் பணி.

2. அடுத்து, தோலின் கழிவுப் பணி தொடர்கிறது. பல்வகைக் கழிவுப்பொருட்கள் (யூரியா, உப்புக்கள் முதலியன) வியர்வையுடன் வெளியேற்றப்படுகின்றன.