பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 225

3. எந்த சமயத்திலும் தேகத்தின் வெப்பநிலை ஒரே சீராக

இருக்க உதவுகிறது. இது தட்பவெப்பக் கட்டுப்பாடு காக்கும் பணியில் சிறப்பாக உதவி செய்கிறது.

- 4. தோல் ஒரு புலனுறுப்பின் வேலையையும் செய்கிறது. ஆமாம். தொடுஉணர்ச்சி உறுப்பாகவும் பணியாற்றுகிறது.

5. சூரிய ஒளியை ஏந்தி, இரசாயன மாற்றம் செய்து, D வைட்டமின் சக்தியை தோல் உண்டாக்குகிறது.

3. நுரையீரல்கள் ()

நுரையீரல்கள் இரண்டும் சுவாசப்பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றன.

இரத்தத்திலிருந்து கார்பன்டை ஆக்சைடானது, நுரையீரல் காற்றுப்பைகளுக்குள் செல்ல, அங்கிருந்து அடிக்கடி நடக்கும் சுவாச வெளியேற்றத்தின்போது, கரியமில வாயுவை வெளியேற்றி வைக்கின்றன.

மூச்சை வெளியே விடும் நேரத்தில், கார்பன்டை ஆக்சைடை மட்டும் நுரையீரல் வெளியே அனுப்பி வைக்க வில்லை. அத்துடன், சிறிதளவு நீர்ப்பசையையும் சேர்த்துத் தான் அனுப்புகிறது. - -

அப்படி வெளியேற்றப்படும் நீரின் அளவு, ஒரு நாளைக்கு அரை லிட்டர் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

குளிரான காலை நேரத்தில் கண்ணாடியில் நீங்கள் மூச்சை விட்டுப் பார்த்தால், நீரின் புகை மூட்டம் அதில் நன்றாகத் தெரியும். -

ஆகவே, வேண்டாத கழிவுப் பொருட்களான கரியமில வாயுவையும், தேவையற்ற தண்ணிரையும் நுரையீரல்கள் வெளியேற்றி, நலமாகப் பணியாற்றுகின்றன.