பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 227

கழிவுமண்டலமும் உடற்பயிற்சிகளும்

உடற் பயிற்சிகளால், சிறுநீரகங்களின் செயல்களில் செழுமை வளர்க்கப்படுகிறது. சிறுநீரகம் வழியே இரத்த ஒட்டத்தின் அளவு அதிகமாகிறது. -

அதனால், சிறுநீர் வெளியேறும் தன்மையிலும் செயல்திறம் பெருகுகிறது.

வியர்வைச் சுரப்பிகள் வேகமாகப் பணியாற்றி, தோல் மூலமாகக் கழிவுகளை வெளியேற்றி, தூய்மைப்படுத்து கின்றன.

சோடியம் குளோரைடு போன்ற உப்புக்கள் வியர்வை மூலம் வெளியேறிவிடுவதால், சிறுநீரில் உப்பின் அளவு சரி நிலையில் அமைகிறது.

கழிவு மண்டல உறுப்புக்கள் வலிமை பெறுவதால், தங்குதடையின்றி, தடுமாற்றமின்றி, கழிவுப் பொருட்களைக் காலா காலத்தில் அனுப்ப, தேகத்தைத் தூய்மையாகவும் செழிப் பாகவும் தொடர்ந்திருக்க, உடற் பயிற்சிகள் உதவுகின்றன. -