பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 231

கண்கள் சரீரத்தின் வெளிச்சம் என்கிறது விவிலியம், கண்ணில்லாதவர்களைக் கபோதிகள் என்று வருந்திக் கூறும் அளவுக்கு, கண் மிகவும் பயனுள்ள புலனாக இருக்கிறது.

நமக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. இவை மண்டை ஒட்டில் உள்ள கண்குழி (Orbit) என்ற எலும்புக் குழியில் எழிலாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. -

அமைப்பு

கண்ணானது கோழி முட்டை வடிவம் உடையது. ஒரங்குல விட்டம் உடையது. தசைகள் சுற்றிலும் இருப்பதால், கண்ணை விரும்பிய திசைப் பக்கம் அசைத்து, இயக்கிப் பார்க்க முடிகிறது.

இந்தக் கண் என்கிற விழிக்கோளத்திற்கு (Eyeball) மூன்று உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (வெளி உறை)

2. நடுப்படலம்

3. உட்படலம்.

1. வெளிப்படலம்: இதைக் கண் இழை உறை என்கிறோம். இதில் இரண்டு பகுதிகள் உண்டு.

முன் பகுதிக்கு விழிவெண்படலம் (Cornia) என்று பெயர். -

பின் பகுதிக்கு விழிவெளிப்படலம் (Selera) என்று பெயர். -

விழிவெண்படலம் ஒளி ஊடுருவும் தன்மையுடையது. இதில் இரத்த நாளங்கள் கிடையாது. ஆனால் உணர்வு நரம்புகள் உள்ள விழிவெளிப்படலம், அவித்த முட்டை போன்ற வெண்மையுடையது. -

---