பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

இது கண்ணின் வடிவத்தை, அதே அளவில் வைத்துக் கொள் உதவி செய்கிறது. , -

2. நடுப்படலம்: இந்த நடுப்படலத்தில், ஏராளமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன. அதனால், இதைக் கண்ணின் இரத்த நாள உறை என்று அழைக்கின்றார்கள்.

நடுப்படலம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக விளங்குகிறது.

மூன்று பகுதிகளில் (அ) முன் பகுதியைக் கரும்படலம் அல்லது கிருஷ்ணபடலம் (Iris) என்று அழைப்பர்.

(ஆ) நடுப்பகுதியை சிலியரி அங்கம் என்றும், (இ) பின் பகுதியை விழியடிக் கரும் படலம் (Choroid) என்றும் அழைப்பர். -

மோதிரம் போன்று அமைந்திருக்கும் கரும்படலத்தின் மத்தியில் உள்ள துவாரத்திற்கு, கண்பாவை அல்லது கண்மணி (Pupil) என்று பெயர். -

கரும் படலத்தின் நிறம், அதிலுள்ள நிறமிகளின் அளவைப் பொறுத்தே அமைந்திருக்கிறது.

கரும் படலத்தின் உள்ளே இரண்டு விதத் தசைகள் உள்ளன. - *

ஒன்று கண் பாவையைச் சுருக்கும் சுருக்குப் பாவைத் தசை.

மற்றொன்று கண் பாவையை விரிவடையச் செய்யும்

விரிவுப் பாவைத் தசை.

வெளியுலகின் ஒளி அளவுக்கு ஏற்ப, பாவை விரிந்து சுருங்குகிறது. பிரகாசமான வெளிச்சமாக இருந்தால், பாவை சுருங்கிக் கொள்கிறது. மங்கலான வெளிச்சம் இருந்தால்,