பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மூளைக்குப் பார்வை நரம்புகள் செல்லுமிடத்தில் மட்டும், விழித்திரை இல்லை. அங்கே கூம்புகளோ, கம்புகளோ எதுவும் கிடையாது என்பதால், ஒளிக்கதிர்களை உணர முடிவதில்லை. அந்த இடத்தைக் குருட்டு இடம் அல்லது குருட்டுப் புள்ளி (Blind Spot) என்று கூறுவர்.

கண்ணின் விழித்திரையிலிருந்து ஏற்படுகிற காட்சிகள், பார்வை நரம்பு வழியாக, மூளைக்கு அனுப்பப்படுகின்றன.

இரண்டு கண்களையும் ஒரே திசையில், ஒரே நிலையில் நிறுத்திப் பணியாற்றும்படி செய்ய, ஆறு தசைகள் வேலை செய்கின்றன.

வெளியிலிருந்து ஏதாவது ஆபத்து நேராத வண்ணம் கண்களைக் காப்பாற்ற இமைகள் உதவுகின்றன. இந்த இமையின் கீழே, மெல்லிய வளவளப்பான ஜவ்வு ஒன்று படர்ந்திருக்கிறது. இது மேலும் வளைந்து விழிவெண் படலத்தின் மேலாகப் படர்ந்திருக்கும். இதற்கு இணைப்புக் காப்புறை (Conjunctiva) என்று பெயர்.

பளிங்கு லென்ஸி என்பது இருபுறமும் குவிந்த உறுப்பாகும். இதில் இரத்த நாளம் இல்லை. ஆனால் ஒளி புகும் தன்மை உள்ளது. இதற்கு ஒளிக்கதிர்களைத் திசை திருப்பும் ஆற்றல் உண்டு.

சிலியரித் தசையுடன் லென்ஸ் இணைக்கப்பட்டிருக் கிறது. லென்ஸ் வளைவு நெளிவு கொள்வதால், பல்வேறு தூரங்களில் உள்ள பொருட்களைக் கண்ணால் செளகரிய மாகக் காணமுடிகின்றது. *

விழிலென்சிற்கும் விழி வெண்படலத்திற்கும் இடையே, ஒளிபுகும் தன்மை வாய்ந்த ரசம் என்கிற, திரவம் இருக்கிறது. இதற்கு முன்கண்ரசம் என்றும்; விழிலென்சுக் கும் விழித்திரைக்கும் இடையே இருக்கும் திரவத்திற்கு (ரசத்திற்கு) பின்கண்ரசம் (Aqeous Humour) என்றும் பெயர்.