பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 235

கண்ணின் பாதுகாப்புக்கென்று, பல பிரிவுகள் இருக் கின்றன. புருவங்கள், இமை மயிரிழைகள், கண்ணிமை ஆகியவை அந்தப் பாதுகாப்புப் பிரிவுகளில் அடங்கும்.

கண் புருவங்கள், முன்நெற்றியிலிருந்து, கண்களுக்குள் வியர்வை நுழையாதபடிக்குத் தடுக்கின்றன.

இமை மயிரிழைகள் இமைகளின் ஒரத்தில் இருந்து, தூசித் தும்புகள் கண்களுக்குள் போகாமல் தடுத்துக் காக்கின்றன.

கண்ணிர் சுரப்பிகள், கண்ணின் வெளி ஒரத்தில் அமைந்திருக்கின்றன. கண் கோளத்தின் முன்பகுதியில் எப்பொழுதும் கண்ணிர் காணப்படுவதால், விழிவெண் படலம் உலர்வதேயில்லை.

கண்ணிர் கண்களை சுத்தம் செய்துவிட்டு, கண்ணின் உள் ஒரத்தில் இருக்கும் கண்ணிர்ப்பையை சென்றடைகிறது. அங்கிருந்து சிறு நாளம் வழியாக, மூக்குப்பகுதிக்கு வந்து சேர்கிறது. -

எப்படிப் பார்க்கிறோம்?

வெளியிலுள்ள ஒளிக்கதிர்கள், ஒளியைக் கடத்தும் தன்மையுள்ள விழிவெண்படலத்தின் வழியாக முன்கண் ரசம், விழிலென்ஸ், பின்கண்ரசம் போன்றவற்றின் வழியாக ஊடுருவிச் சென்று, விழித்திரையின் மீது படுகிறது.

விழித்திரையிலிருந்து பார்வை நரம்புகளின் உணர்ச்சி அலைகள், மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. அதன் தொடர்பாக, மூளையானது நாம் கண்ட காட்சியை உணரச் செய்கின்றது. இதுவே நாம் பார்க்கும் முறையாக அமைந்திருக்கிறது.