பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. படலங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல்,

சுமுகமாக செயல்பட உதவுகின்றது.

5. பஞ்சேந்திரியங்கள் என்பதாக அழைக்கப்படுகின்ற

முக்கிய உறுப்புக்களின் (கண், காது, மூக்கு, வாய்,

தோல்), முக்கிய பாகமாக அமைந்த, சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.

6. அநேகமாக, எல்லா சுரப்பிகளிலும் நாளங்களிலும்,

இவை இருப்பதால், அந்தந்த இடத்திற்குத் தேவையான நீரைச் சுரக்க உதவுகிறது.

2. இணைப்புத் s: (Connective Tissue)

இணைப்புத் திசுவானது, உடல் உறுப்புக்களை ஒன்றாகக் கட்டி, உறுதியாக உழைக்க உதவுகிறது. இவ்வாறு ஒருங்கிணைக்கும் பணியினால், இது உடலின் ஆதாரமாக, கட்டுப்பாடான பாதுகாப்பு அளிப்பதாக, அந்தந்த உறுப்புக்கள் அதனதன் இடத்திலே இருந்து எடுப்பாகப் பணியாற்ற உதவுவதுடன், இரண்டு உறுப்புக்கள் இணைகிற இடத்தில் ஏற்படுகிற இடைவெளியை நிரப்புகின்ற அமைப்பாகவும் உதவுகிறது. -

உணவுச் சத்தினை உறுப்புக்களுக்கு வழங்குவதற்காக உதவுவதுடன், திசுக்களுக்குப் பாதுகாப்பாக இருந்தும் செயல்படுகிறது. - -

நோயுற்ற பொழுது அல்லது காயம் ஏற்படுகிற போது, அழிந்துபோன திசுக்கள் அல்லது இடமிழந்துபோன திசுக்கள் மீண்டும் வளரும் வகையில், மேன்மையுடன் உதவுகிறது.

இணைப்புத் திசுத் தொகுதிகள், அமைப்பால் நான்கு வகைப்படுகின்றன. --