பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 239

வெளிக்காதின் மடலானது, நெகிழ்வுக் குருத்தெலும்பு களால் ஆனது. இதற்குப் பின்னா (Pinna) என்று பெயர்.

இந்தக் காதுப்பாதை சாய்ந்தும், வளைந்தும் அமைந்திருப் பதால், மணல், தூசி போன்ற எந்தப் பொருளும், எளிதாக உள்ளே நுழைந்துவிட முடியாது.

இன்னும் ஒரு பாதுகாப்புப் பொருள் ஒன்றும் இந்த வழியில் இருக்கிறது. -

அந்த அற்புதமான பொருளுக்குக் குறும்பி என்று பெயர். இது ஒரு மெழுகுப் பொருள் போன்றது. எறும்பு, கொசு, ஈ போன்ற பூச்சி வகைகள் காதுப் பாதைக்குள் செல்கிறபோது, இந்தக் குறும்பிக்குள் சிக்கிக் கொள்கின்றன.

காதுப் பாதையின் கடைசியாக, செவிப்பறைத் தோல் (Tympanic membrance) stairgoylb 905 Quococou Gord, பகுதி அமைந்திருக்கிறது. இந்த மெல்லிய தோல் பகுதி யானது, வெளிக் காதையும், நடுக்காதையும் பிரித்துக் காட்டுகிறது. 2. நடுக்காது

நடுக்காதானது, 1 கன சென்டி மீட்டர் பரிமாணம்

கொண்ட குழியால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காதுக் குழியை செவிப்பறைக் குழிவு என்றும் கூறுவார்கள்.

நடுக் காதில் பொட்டெலும்பு (Temporal bone) எனும் எலும்பானது, ஒர் அறை போல அமைந்திருக்கிறது. அதில் மூன்று சிற்றெலும்புகள் சங்கிலித் தொடர் போல் இருக்கின்றன. அவை: -

() &3$ argybu (Malleus - Hammer) (4) Llll smL argylbl I (Incus - Anvil)

(@) −9, siis cuiq ou sr@yubly (Stapes - Stirrup)