பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

- இங்கே கூறிய 3 சிற்றெலும்புச் சங்கிலியானது ஒரு பாலம் போல அமைந்து, செவிப்பறையையும் உட்காதையும் இணைக்கிறது. .

நடுச் செவிக் குழல் ஒன்று உள்ளது. இது 3.5 செ.மீ நீளமும் 2 மில்லி மீட்டர் துவாரமும் கொண்டு அமைந் திருக்கிறது.

நடுக் காதிலிருந்து ஈஸ்டேஷின் குழாய் (Eustachiautube) என்று ஒன்று தொடங்கி, தொண்டையுடன் போய் இணைகிறது.

வெளிக்காது வாயு மண்டலத்தின் பகுதியில் இருக்கிறது. இந்த வெளிக்காதுப்புறக் காற்றின் அழுத்தமும், நடுக்காதில் உள்ள காற்றின் அழுத்தமும் ஒன்றுபோல, சீரான அழுத்தத்தடன் இருக்க வேண்டும்.

அப்படி இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் சுவாசிக்கும் காற்றின் ஒரு பகுதி, யூஸ்டேஷியன் குழாய் வழியாக நடுக்காதுக்குச் செல்கிறது. -

அதனால் தான், செவிப் பாதையின் இருபக்கங்களிலும் காற்றின் அழுத்தம் ஒரே அளவாகவும், ஒரே சீராகவும் அமைந்துவிடுகிறது.

செவிப்பறையிலிருந்து ஏற்படுகிற அதிர் அலையானது முதலில் சுத்தி எலும் பில் பட, அதனுடன் இணைக் கப்பட்டிருக்கும் பட்டை எலும்பில் அதைக் கடத்த, பட்டை எலும்பிலிருந்து அங்கவடிவ எலும்புக்குப் போய்ச்சேருகிறது.

அங்க வடிவ எலும்பு, செவிப் பறை கொடுக்கின்ற அதே அதிர் அலையின் ஒலியைக் கடத்துகிறது. என்றாலும்,