பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 241

அதைவிட 20 மடங்கு ஒலி அதிகமாகும் படி, கடத்துகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

3. உட்காது

உட்காது மிக நுண்ணிய அமைப்பைக் கொண்டதாகும்.

உட்காதிலே நத்தைக் கூடு அமைப்பு போன்ற நத்தை எலும்பு (Cochlea) என்ற ஒன்று இருக்கிறது.

இதனுள்ளே பெரிலிம்ப் (Perilymph) எனும் திரவம் இருக்கிறது. மூளையிலிருந்து வருகின்ற ஒலி நரம்புகள், இத்திரவத்தில் சென்று, பல நுண்ணிய கிளைகளாகி முடிவடைகின்றன.

நத்தை எலும்பின் மேல்பாகத்தில், மூன்று அரை வட்ட வடிவமுள்ள அரைவட்டக் கால்வாய்கள் (Semicircular canal) இருக்கின்றன. இவற்றில் ஒன்று சாய்ந்தும், மற்ற இரண்டும் செங்குத்தாகவும் அமைந்துள்ளன.

இவையே நமது உடலை சம நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. s

காதுகள் செயல் புரியும் முறை

காற்றின் அதிர்வுகளையே ஒலி என்கிறோம்.

காற்றின் அதிர்வுகள் ஒலி அலைகளாக எழுந்து பெருகி வருகின்றன. -

அந்த ஒலி அலைகள் வெளிக்காதில் மோதி, உள்ளே புகுந்து, காதுப் பாதையின் வழியாக உட்சென்று, செவிப் பறையில் மோதி, அதிர வைக்கிறது.