பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தேகப் பயிற்சிகளும் தேகமும் Gaur சேவையும் -

தேகப் பயிற்சிகள் தேகத்திற்கு, தினம் தினம் தேவைப் படுகின்றன. பயிற்சிகள் உறுப்புக்களைப் பலப்படுத்து கின்றன. வளப்படுத்துகின்றன. பக்குவப்படுத்தகின்றன.

பயிற்சிகள் உறுப்புக்களை பாங்கான உழைப்புக்குத் தயார்ப்படுத்துகின்றன. செய்கின்ற பணிகளில் செழுமையை ஊட்டுகின்றன. மீட்டுகின்றன.

தேகப் பயிற்சிகளால் மட்டுமே தேகத்தை சிறப்புடைய தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, உலகில் இன்று எல்லா தரத்து மக்களிடையேயும் உதயமாகிவிட்டது. -

அந்த நம்பிக்கை, நாகரிகம் மிக மிக மேலும் உறுதியாகி விட்டது.

நலிந்த உடலோடு நடக்கும் மக்கள்; மருத்துவ மனை யில் மனம் கசிந்து காத்துக் கிடக்கும் மக்கள்; நோய்களோடு போராடி நொந்துபோய்க் கிடக்கின்ற மக்கள் எல்லோருக்கும், மருத்துவர்களே, மருந்துகளைக் கொடுத்து விட்டு, ஆலோசனை ஒன்றையும் அத்யாவசியம் என்று கூறி அனுப்பி வைக்கின்றார்கள்.

அந்த ஆலோசனை என்ன் தெரியுமா?

தேகப் பயிற்சி செய்யுங்கள் என்று தான்!

தேகப் பயிற்சி செய்கிற போது, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை, இங்கே நாம் தெளிவாகக் காண்போம்.

1. 2 Lawriqil’s Lava13;gir (Immediate Effects)

2. fairl 35movi’s Lucrair (Long range Effects)