பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 245

3. தேகத்தின் மாற்றங்களும் ஏற்றங்களும் (Anatomical and Physiological Changes)

இனி, ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

/ உடனடிப் பலன்கள்

1. இதயம் வேகமாக இயங்கி இரத்தத்தை இறைக்கிறது. இரத்தமும், நிணநீர்களும், விரைவாக உறுப்புகளுக்குள்ளே பாய்ந்து, எல்லா திசுக்களிலும் சென்றடைகின்றன.

இரத்தம் சென்று சேர்கிறது என்றால், அது அதிகமான உணவுச்சத்தையும், உயிர்க்காற்றையும் கொண்டு போகிறது என்பது தானே அர்த்தம்!

உடலின் செல்கள் முழுவதற்கும் உணவையும் காற்றையும் கொண்டு போகின்ற இரத்தம், திரும்பி வருகிறபோது, செல்களில் ஏற்பட்டுத் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களையும், எடுத்துக் கொண்டு வந்து விடுகின்ற்து.

இதனால், கழிவுப் பொருட்கள் கூடிப்போகாமல், தேகம் தூய்மை பெற்றுக் கொள்வதுடன், உணவுச் சத்தைப் பெற்று வலிமையும் அடைந்து கொள்கிறது.

2. சுவாசப் பணியில், நுரையீரல்கள் ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்கின்றன. அடிக்கடி பெறுகிற ஆழ்ந்த சுவாசமும், நுரையீரலை உயிர்க்காற்றால் நிரப்பி விடுகின்றது.

உயிர்க்காற்றானது இரத்தத்தோடு கலந்து, உடலெங்கும் சென்று, சத்தினை (Energy) விளைவித்துத் தந்துவிட்டு, அதோடு, விளைகின்ற கழிவுப் பொருட்களையும் விரைவாக விடுவித்து, வெளியேற்றும் பணியைச் செய்து விடுகிறது.