பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அப்படி, வருகின்ற சில அபாயகரமான நோய்களும், தேகத்தில் இருந்தாலும், தணிந்துபோய்க் கிடக்கின்றன. இதோ சில நோய்களைப் பாருங்கள்:

(அ) மனப் போராட்ட படபடப்பு நோய்கள் (ஆ) ஊளைச் சதைக் கோளாறுகள் (இ) இரத்தக் குழாய் கோளாறுகள் (ஈ) முதுகுவலிப் பிரச்சினைகள்

(உ) நீரிழிவு நோய் (ஊ) வயிற்று நோய்கள்

எல்லா வகை நோய்களும் பயிற்சி செய்பவர்களிடம், வாலைச் சுருட்டி ஒளிந்து கொண்டிருக்கின்றன.

4. தேகத்தின் திறமான தகுதிநிலை, உழைக்கும் நிலை, எல்லாம் தெளிவான வளர்ச்சி பெறுகிறது. வளர்ந்து கொண்டே வருகிறது.

5. தேகத்தில் அவ்வப்போது தோன்றுகிற சிறு சிறு நோய்கள், வலிகள், வேதனைகள், எலும்பு விறைப்புகள், தசைப் புண்கள், மற்றும் பிடிப்புகள் எல்லாம் குறைந்து போகின்றன. சில சமயங்களில் இடம் தெரியாது விலகிப் போய்விடுகின்றன.

6. நிற்கும்போது தளர்ந்துபோய் நிற்கின்ற தோரணை (Posture), மற்றும் குனிந்து வளைந்து நிற்கும் நடக்கும் செயல்களில் எல்லாம், நிமிர்ந்த தன்மை நேர்கிறது. பார்வைக்கு அழகான தோரணையை ஏற்றி வைக்கிறது.

7. பொதுவாக, பயிற்சியாளர்களின் தேக அமைப்பு, மற்றவர்களைக் கவரும் வண்ணம், மெருகேறிக் கொள்கிறது.