பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 249

8. தேகத்தில் செயலாற்றும் திறன்அதிகமாகிக்கொள்கிறது. குறைந்த தேகசக்தியைக் கொண்டு, அதிகமான அளவு வேலை செய்யும் செயலாற்றல், மிகுதியாகி விடுகின்றது.

9. வேலை செய்யும் போது விளைகின்ற மன படபடப்பு, மற்றும் மனச்சுமை கூட குறைந்துபோய், செய்யும் தொழிலில் நுணுக்கமும் நுண்மையும் அதிகமாகிக் கொள்கிறது.

10. மனக் கிளர்ச்சியும் படபடப்பும் ஏற்படுவது குறைகிறது. மனதாலும், தேகத்தாலும் ஒய்வு பெறுகிற அமைதிகாணும் திறமைகூடிக் கொள்கிறது.

11. வேலை செய்யும் போது, விரைவில் களைத்துப் போவது இயற்கைதான். என்றாலும், தேகப் பயிற்சியாளர் களுக்கு உழைக்கும் நேரம் அதிகமாவதுடன், விரைவில் களைப்படையக் கூடிய நிலைமையும் நேராமல் போகிறது.

12. நோய்க்கு ஆளாவது மனித இய்ற்கைதான். மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும் நடப்பது தான். அப்படி நோய்க்கு ஆளானாலும், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாலும், விரைவில் குணமடைகின்ற வாய்ப்பை, பயிற்சிகள் ஏற்படுத்திவிடுகின்றன.

மேற்கூறிய பயன்கள் எல்லாம், தேகப்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகின்றவர்களுக்கு, ஏற்படுகின்ற நீண்ட காலப் பயன்களாகும். -

இனி, தேகத்தில் ஏற்படுகிற மாற்றங்களையும் காண்போம். -

3. தேகத்தின் மாற்றங்களும் ஏற்றங்களும்

1. இதயத்தின் அளவு விரிவடைந்து கொள்கிறது. இதயத்தின் இரத்தம் இறைக்கும் அளவும் அதிகமாகி விடுகிறது. இதனால், அதிகமான இரத்தத்தை வெளியே அனுப்பிவிட்டு, இதயம் ஒய்வு எடுத்துக் கொள்கிற நேரமும்