பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கூடுதலாகிறது. இதயத்தின் ஒய்வு தேகத்திற்கு இதமான ஒன்று தானே! -

2. இதயம் இரத்தம் இறைக்கும் அளவு கூடுதலாகிறது. இரத்தத்தின் தன்மையில் ஏற்றம் கிடைக்கிறது. அதிகமான சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் விருத்தியடைந்து கொள்கின்றன. தண்ணீரின் அளவு குறைவடைகிறது. அத்துடன், உயிர்க்காற்றை உடலெங்கும் ஏந்திக் கொண்டு போகிற சிவப்பணுக்களின் சக்தி, மிகுதியாகி விடுகின்றது.

3. இரத்தத்தை உடலெங்கும். கொண்டு போகின்ற

இரத்தத்தந்துகிகள் எண்ணிக்கையின் அளவும் ஆற்றலும் அதிகமாகிவிடுகின்றன. -

அத்துடன், இதயத்தசைகளும் வலிமையுடையதாக வளர்ச்சி பெற்றுக் கொள்கின்றன.

4. ஆழ்ந்த சுவாசத்தை அடிக்கடி மேற்கொள்வதால், நுரையீரல்களின் அடித்தளங்களில் கூட, உயிர்க்காற்றைப் பெற்றுக்கொள்கிற கொள் அளவும், கூடுதலாகி விடுகின்றது. இதனால், காற்றுப் பரிமாற்றம் அங்கே அதிகமாக நிகழக் காரணமாகின்றது. மேலும், கடுமையான வேலைகள் செய்யும் போது கூட, மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்குகின்ற தன்மை மாறிப்போய், சிரமமின்றி வேலை செய்யும் சக்தி கூடி விடுகின்றது. -

5. தசைகளில் உள்ள வேலை செய்யும் தசைநார்கள், எண்ணிக்கையில் அதிகமாகிக் கொள்கின்றன. அத்துடன் தசை நார்களின் அளவும் வடிவமும் விருத்தியடைகின்றன. பார்வைக்கு அழகாகத் தசைகள் தெரிவதுடன், பலம்கொண்ட தாகவும், பருமன் மிக்கதாகவும் தசைகள் வளர்ந்து கொள் கின்றன. --

6. தசைகளுக்கு அதிகமான வலிமை கூடுகின்றது. தசைகளில் பொருத்தப்பட்டிருக்கும் நரம்புகளின் மிடுக்கும்