பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 251

அதிகமாகி, உணர்ச்சிகளைக் கடத்தும் பணியில் வேகமும் விழிப்பும் மிகுதியாகி விடுகின்றன.

7. தசைகள் நரம்புகளின் இணைப்புச் செயலாற்றல், மிகுதியாகி விடுகின்றது. இவை எப்படி நிகழ்கின்றன என்று பார்ப்போம்.

(அ) தசைகளில், வேண்டாத கொழுப்புகள் கரைக்கப் படுகின்றன. ஊளைச்சதையும் உறுதியுள்ளனவாக மாற்றப் படுகின்றது. - -

(ஆ) எதிர்ப்புச் சக்திகளை விளைவிக்கும் தசைகளில் எதிர்ப்பின்மை ஏற்பட்டு, இதமான நடவடிக்கைகள்நிகழ்கின்றன. (இ) நரம்புகளின் உணர்ச்சிக் கடத்தல்கள் நிறைவாக நடைபெறுகின்றன.

- (ஈ) உடல் இயக்கத்தில், வேண்டாத அசைஆகள். மற்றும் எழிலற்ற இயக்கங்கள் எல்லாம் குறைக்கப்படு கின்றன. - - -

(உ)தசைகளில் உள்ளதசைநார்கள்அதிக சக்தியைப்பெற்று, இயக்கத்தில் இணையிலா ஆற்றலுடன் செயல்படுகின்றன. நமது நம்பிக்கை -

எனவே, தேகப் பயிற்சிகள் தேகத்திற்கு உதவும் தோன்றாத் துணையாக, வளம்தரும் வழித்துணையாக, வாழ்வுத் துணையாக விளங்குகின்றன என்ற உண்மையை மனித குலம் மதிக்கின்ற காலம் தான், மக்கள் வாழ்க்கையில் பொற்காலமாகத் திகழும் -

தேகப் பயிற்சிகள் செய்து திளைக்கும்போது தான் மனிதகுலமும் மகிழும் என்று நாம் நம்பலாம். -

நிச்சயமாக அந்தக் காலம் தூரத்தில் இல்லை என்றும் தைரியமாகச் சொல்லலாம், நம்பிக்கை கொள்ளலாம். நாளெல்லாம் நலமுடன் வாழலாம்.