பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 35

எலும்பு மண்டலம்

எலும்பு

மனிதரது எலும்புக்கூடு, பல்வேறுபட்ட எலும் பு களாலும், அவற்றின் இணைப்புகளாலும் உருவானதாகும்.

ஒரு எலும் பு என்பது சிக்கலான அமைப்பைக் கொண்டதாகவே விளங்குகிறது. எலும்பின் பெரும்பாகம் அடர்த்தியாகவும், கடற் பஞ்சு போன்ற எலும் புத் திசுக்களாலும் ஆனதாகவே காணப்படுகிறது.

உடம்பில் உள்ள, எல்லா இணைக்கும் திசுக்களிலும், கடினமாய் அமைந்திருப்பது எலும் பாகும். இதில் 50 சதவிகிதம் தண்ணிர் உள்ளது. மீதி உள்ளதில் கால் பாகம் கண்ணாம்பு (கால்சியம்) பாஸ்பேட்டும்; மற்ற கால் பாகத்தில் செல் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.

மற்ற உறுப்புக்களைப் போலவே, ஒவ்வொரு எலும்பிலும் நரம்புகள், இரத்த, நிணநீர் நாளங்கள் உள்ளன. எலும்பின் உட்புறம்

ஒரு எலும்பை எடுத்து வெட்டி, அதன் குறுக்குத் தோற்றத்தைப் பார்க்கும் போது, அதன் செழிப்பான அமைப்பும், நுண்மையும் நம்மை மெய் சிலிர்க்கச் செய்கின்றன.

வெட்டப்பட்டப் பகுதியான எலும் பைச் சுற்றிலும் எலும்பு இருக்கும். அதிலுள்ள இரத்தம், நாளங்கள் நிறைந்த செல்கள், நடுவில் உள்ள மத்திய கால்வாயைச் சுற்றி (Central Canal) வட்டமாக அமைந்திருக்கும்.

இந்த மத்திய கால்வாய்க்கு ஹேவர்சியன் கால்வாய் (Havarsian Canal) aTaTg)I Q Guu 2 sT($).