பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எலும்பு செல்கள் இருக்கின்ற பகுதிக்கு லாகுனா (Lacuna) என்று பெயர். -

ஒவ்வொரு லாகுனாவிற்கும் இடையில் அமைந் திருக்கும் இடை வெளிக்குப் பெயர் லாமெல்லா (Lamela) என்று பெயர் லாமெல்லாவில் உப்புக்கள் இருக்கும்.

இதில், இருக்கின்ற ஒவ்வொரு எலும்பு செல்லும் ஹேவர்சியன் கால் வாயுடனும், கனாலிகுலி என்ற கால்வாயுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியைத் தான் ஹேவர்சியன் மண்டலம் (Haversion System) என்று அழைக்கின்றார்கள்.

ஒவ்வொரு எலும்பைச் சுற்றிலும், பெரி ஆஸ்டியம் (Periosteum) என்ற மெல்லிய தோல் படர்ந்திருக்கிறது. எலும்பின் அமைப்பு

உடற் கூட்டிலுள்ள எலும்புகள், அவற்றின் வடிவத்தைப் பொறுத்தே பெயர் பெறுகின்றன. நீண்ட, கட்டையான, தடடையான, கலவையான எலும்புகள் என்றும் அவை அழைக்கப்படுகின்றன. இவை நான்கு வகையாக அமைந்திருக்கின்றன. -

1. நீண்ட எலும்புகள் (Long Bones)

கைகால்களில் நீண்ட எலும்புகள் காணப்படுகின்றன. உதாரணம் கை எலும்புகள், முன்கை எலும்புகள் (Radius & ulna) @gmam argyiibij, &tav aTaylblj&cir (Tibia and Fibula).

2. கட்டையான எலும்புகள் (Short bones)

இவற்றைக் குட்டையான எலும்புகள் என்றும் கூறுவார்கள். உதாரணம்: உள்ளங்கை எலும்புகள் .(Metacarpus), umg, sTayuh L3:air (Metatarsus), o)U c