பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 39

1. நடு உடல் எலும்பு

2. தோள்பட்டை, கைகள் எலும்புகள்

3. இடுப்பு எலும்பு

4. கால்கள் எலும்புகள்

5. மண்டை ஒட்டின் எலும்புகள் 1. நடு உடல் எலும்புகள்

முதுகெலும்பும் (Spine) மார்புக் கூடும் (Thorax) ஆகிய இரண்டும், நடு உடல் எலும்புகளில் அடங்கும்.

முதலில், முதுகெலும்பின் அமைப்பினைப் பார்ப்போம்.

(அ) முதுகெலும்பு

இதை ஆங்கிலத்தில் Back bone என்றும், தமிழில் முதுகெலும்புத்தண்டு என்றும் கூறுவார்கள்.

நடு உடலைத் தாங்குகிற முதுகெலும்பு, காண்பதற்கு ஒரே எலும்பு போலத் தோன்றினாலும் ஒரே எலும்பு அல்ல. அதிலே 33 அல்லது 34 முள்ளெலும்புகள், சங்கிலி போல சேர்க்கப்பட்டு, இணைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, தலைப்பகுதியின் கீழ்பாகத்திலிருந்து, இடுப்பு வரை நீண்டு வரும் எலும் புத் தொடருக்குத்தான் முதுகெலும் பு என்று பெயர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

= முதுகெலும்பின் முழு பாகத்தையும் நாம் 5 வகையாகப்

பிரித்துப் பார்க்கலாம்.

1. கழுத்துப் பகுதி (Cervical) 7 எலும்புகள்.

2. மார்புப் பகுதி (Thoracic) 12 எலும்புகள்