பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 41

உதவுகின்றன. முதுகெலும்பின் இணைப்புகள் எளிதாகக் குணியவும், நிமிரவும், பக்கவாட்டில் வளையவும், சுற்றவும் அனுமதித்து, ஆக்க பூர்வமாக உதவுகின்றன. முதுகெலும்பின் வளைவுகள்

பிறந்த குழந்தையின் முதுகெலும்பானது, வளைவுகள் எதுவும் இன்றி, ஏறத்தாழ நேராகவே இருக்கும். பிறகு குழந்தையிடம் ஏற்படுகிற வளர்ச்சியின் காரணமாக, முதுகு எலும்பில் வளைவுகள் முகிழ்கின்றன.

வயது வந்தவர்களுக்கு முதுகெலும்பில் இரண்டு முன் வளைவுகள் இருக்கின்றன. -

1. கழுத்து 2 கீழ் முதுகு வளைவுகள். இரண்டு பின்புற வளைவுகள் இருக்கின்றன. 1. மார்பு வளைவு 2. திரிக வளைவு.

இந்த நான்குவளைவமைப்பும், ஒரு மனித உடலுக்கு இருக்க வேண்டிய இயல்பான வளைவுகளாகும். இவற்றில் ஏதாவது ஒன்று அளவுக்கும் மேலாக வளைந்து விட்டால், உடலிலே கோணல் மாணலாகக் காட்சி தரும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இதை சீர்கெட்ட அமைப்பு என்பார்கள். (அ) முன்புற வளைவு (Kyposis) (*!) 1761 poignary (Lordosis) (இ) பக்க வாட்டில் வளைவு (Scoliosis) (.) முன் வளைவும் பின் வளைவும் இணைந்த அழகற்ற

  1. Ngogo (Kypho lordosis) இவற்றை சற்று விளக்கமாகக் காண்போம்.

(அ) முன்புற வளைவு: இதை கைப் போசிஸ் என்பார்கள். முன்புறமாகக் குனிந்து, கூன் முதுகு போடுவது