பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 43

முதுகெலும்புத் தொடரானது, பக்கவாட்டில் அதிகமாக வளைந்திருப்பதே முக்கியக் குறிப்பாகக் கொள்ள வேண்டும்.

இப்படி ஏற்படுவதற்கு, பலமில்லாத தசைகள், பற்றாத உணவு. முதுகெலும் புத் தொடரில் புற்றிக் கொள்ளும் நோய்கள், பக்கவாதம் போன்றவை பக்கவளைவை ஏற்படுத்துகின்ற காரணங்களாக அமைகின்றன.

இனி, ஒழுங்கற்ற தோரணை ஏற்படுவதற்குரிய காரணங்களைக் காண்போம்.

பரம்பரை: ஒருவருக்கு பரம்பரையாக ஏற்படுகின்ற ஒழுங்கற்ற உடலமைப்பு, அதனால் ஏற்படுகின்ற அழகற்ற தோரணை, இவற்றை செப்பனிடவோ, சீர்திருத்தி அமைப்பதோ முடியாத முயற்சியாகும்.

பிறவிக் கோளாறு: பிறக்கும் பொழுதே, உடலில் குறைகளோடு பிறக்கின்ற வாய்ப்புக்கள் நிறைய உண்டு. அங்கஹlனம் என்றும் சொல்வார்கள். குறைந்த உறுப்புக்களை நாம் எதுவும் செய்ய இயலாது. ஆனால், கோளாறுள்ள உறுப்புக்களை உடற் பயிற்சி மூலமும், மருத்துவத்தின் மூலமும் சரி செய்ய முடியும்.

உதாரணமாக, வளைவில்லாத தட்டையான பாதம், வளைந்த கால்கள் முதலியவற்றைக் குணமாக்கலாம்.

நோய்கள்: நோய்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவைகள் உடலைத் தாக்கும் போது, உடல் தளர்ந்து போகிறது. இதனால் எலும்பு பலஹீனம் அடைந்து போகிறது. இந்நோய்களில் மிகவும் கடுமையானவை எலும்புருக்கி நோய், வாத நோய், போன்றவற்றைக் கூறலாம்.

சத்தற்ற உணவும், பற்றாக்குறை உணவும் உடலின்

எலும் புகளை மிகவும் பாதிக்கின்றன. எலும்புகளுக்கு கண்ணாம்புச் சத்து, பாவப்பரஸ். டி வைட்டமின் போன்றவை