பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அத்யாவசியமானதாகும். எலும்புகள் வலிமை குன்றினால், உடல் உறுப்புக்கள் எல்லாமே பாதிப்புக்குள்ளாகும். பாதகமும் ஏற்படும்.

பழக்கங்கள்: மனிதர்களுக்குப் பழக்கங்கள் தாம் வாழ்வை நடத்திச் செல்கிற வல்லமையைத் தருகின்றன.

அவரவருக்குரிய பழக்க வழக்கத்திற்கு ஏற்பவே, அவரவருடைய உடலமைப்பும், வடிவமைப்பும் செப்பம் பெறுகிறது, செழிப்பைக் கொள்கிறது. -

தவறான பழக்கங்கள் தேகத்தைக் கெடுத்தே விடுகின்றன. அதனால் தான், குழந்தைகளுக்கு இளம் வயது முதலே, நிமிர்ந்து நிற்க, நடக்க, உட்காரக் கற்றுத் தருகிறோம். விபத்துக்கள்: சில சமயங்களில் விபத்துக்கள் உடலை வீழ்த்தி விடுகின்றன. விபத்தினால் ஏற்படுகின்ற காயங்கள், வெறும் வடுக்களை மட்டும் ஏற்படுத்தி விடுவதில்லை. உறுப்புக்களை இடம் பெயர்த்து விடுவது ம், அழித்து விடுவதும், இல்லாமல் இழந்து போகச் செய்வதும் போன்ற சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

ஆகவே, உடல் நல்ல நிமிர்ந்த தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையை, நாம் என்றும் மறந்துவிடக்

கூடாது.

நிமிர்ந்து நிற்கும் செம்மாந்த தோற்றத்தைத்தான் தோரணை என்கிறார்கள். (Posture), அப்படியென்றால், தோரணை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமே!

Gonococoor (Posture)

உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாம், ஒரே சீராக, ஒழுங்காக, சரியான தன்மையில், நெறியான மேன்மையுடன்

நிமிர்ந்தும் உயர்ந்தும் அழகுற அமைந்திருப்பதையே தோரணை என்கிறோம்.