பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 45

தோரணம் கட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை தோரண அழகு என்று வருணிப்பார்கள். அது போலவே, நிமிர்ந்து நிற்கும் செம்மாந்த தோற்றத்தையும் தோரணை என்று அழைக்கின்றார்கள்.

அப்படி என்றால், உடல் உறுப்புக்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்ற தல்லவா!

பொதுவாக, உடல் அவயவங்கள் எல்லாம் ஒரே அளவாக, ஒரே வடிவாக அமைந்திருக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.

என்றாலும் உடல் உறுப்புக்களை ஒரே நேர்க் கோட்டில் இருப்பது போல வைத்திருக்க வேண்டும்.

உயரமாக உடலை இருத்தி வைப்பது தான் தோரணை (Tal), கழுத்தை மடிக்காமல் நீளமாக (Long) இருக்கும்படி இருத்தல், மோவாய் (Chin) உள்ளடங்கி, தோள்பகுதி பின்புறமாக நிமிர்ந்து, இயல்பாக இருத்தி, (அடி) வயிறு உள்ளடங்கி, தட்டையாக இருப்பதுபோல் வைத்து, பின் புறப்பகுதியும் குதிகால் பகுதியும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலவும் முழங்கால்களை வளைக்காமலும் நிற்பது தான் நல்ல தோரணைக்கு அறிகுறியாகும்.

எப்பொழுதும் உடலின் எடையை பரவலாக உடல் முழுதும் அமையப் பெற்று, சமமாக அமைந்திருக்கும் தன்மையில் வைத்திருப்பதனால், எப்பொழுதும் எந்தப் பக்கமும் திரும்பவும், இயங்கவும் கூடிய தயாரான நிலையில் இருக்கும் வசதியை அளிக்கும்.

அதாவது, உடலில் உள்ள பல மண்டலங்களும் பாங்காக இணைந்து, பண்போடு பணியாற்றுகின்ற தன்மையே இதமான தோரணையாகும்.