பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மார்பு முள்ளெலும்புடன், விலா எலும்புகளின் பின்புற முனைகள் இணைந்து மூட்டுக்களாக இருக்கின்றன.

இந்த 12 ஜோடி விலா எலும்புகளும், பின்புறம் முதுகெலும்புடன் இணைந்துள்ளன.

இவற்றில் 7 ஜோடி விலா எலும்புகள் மட்டுமே மார்பு எலும் போடு இணையப் பெற்றுள்ளன. இவைகளுக்கு உண்மையான விலா எலும்புகள் (True RIBS) என்று பெயர்.

மீதி 5 ஜோடி விலா எலும்புகளும், மார்பு எலும்புடன் இணையாததால், போலி விலா எலும்புகள் (Faise Ribs) என்று இவை பெயர் பெற்றிருக்கின்றன.

அதாவது 8வது விலா எலும்பு 7வது விலா எலும்புடனும், 9வது விலா எலும்பு 8வது எலும்புடனும், 10வது விலா எலும்பு 9வது எலும் புடனும் இணையப் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள 11வது 12வது விலா எலும்புகள் எதனுடனும் இணையாமல், தசைகளுடன் போய் சேர்ந்து தனியாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவை அசையும் விலா எலும்புகளாக அமைந்திருப்பதால், மிதக்கும் விலா எலும்புகள் (Floating RIBS) என்று அழைக்கப்படு கின்றன.

ஒவ்வொரு விலா எலும்புகளுக்கு இடையே, விலாவிடைத் தசைகள்(inter Costal Muscles) என்ற தசைகள் இருக்கின்றன.

மார்பெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும் விலா எலும்புகள், குருத்தெலும்பினால் இணைக்கப்பட்டிருப்ப தால் தான், மூச்சுவிடுகிறபோது, மார்புக்கூடு சுருங்கி விரியும் லயமான தன்மையைப் பெற்றிருக்கிறது.