பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பழக்க வழக்கங்கள். இவைகளுக்கு ஏற்பவே உடலமைப்பு உறுதி செய்யப்படுகிறது என்பதால் தான்.

1. பொதுவாக ஒர் ஆணின் எலும்புக் கூடானது, அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணின் எலும் புக் கூட்டைவிட உயரத்திலும், உறுதியிலும், வடிவிலும், கனத்திலும் சற்று அதிகமாகவே காணப்படும். --

2. உறுதியான, வலிமையுள்ள தசைகள் ஆண் உடலில் அதிகம் இருப்பதால், தசைகள் இணையப் பெற்றிருக்கும் அடையாளங்கள், ஆணின் எலும் புக் கூட்டில் தான் அதிகமாகத் தென்படும். -

3. ஆணின் மண்டை அளவு, பெண்ணைவிடப் பெரியது. பெண்ணின் மண்டை 1300 C.C. எடையுள்ளதாக இருக்கிறது என்றும் ஆணின் மண்டை 1500, C.C. கனமுள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். -

4. பெண்ணின் தலையை விட, ஆணின் தலை சற்றுக் கரடு முரடாக ஆக்கப்பட்டிருக்கிறது. -

5. ஆணின் தோள் பட்டையானது அகலமாகவும், உயரமாகவும் இருக்கும். பெண்ணின் தோள்பட்டையானது குறுகியும் குவிந்தும் காணப்படும். அதே சமயத்தில், குறுகி வருகிற மார்புக் கூட்டின் அளவை விட, பெண்ணின் வயிற்றுப்

பாகம் பெரிதாகவும் தோன்றும்.

6. பிரசவ வசதிக்கேற்ப, பெண்ணின் இடுப்பு அகல முள்ளதாக இருக்கும். அதனால், இடுப்பில் உள்ள குழி, ஆழம் இல்லாததாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆணின் இடுப் போ, குறுகிய அமைப்புக்

கொண்டதாகவும் இடுப்புக் குழியோ அதிக ஆழத்துடனும் உருவாக்கப் பட்டிருக்கும்.