பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கைகளைப் பக்கவாட்டில் விரித்தல் (Abduction) கையை முன்புறமாக நேரே நீட்டல் (Flexion) கையை மார்புக்கு முன்னாக மடக்குதல் (Abdution) கையை முதுகுப் புறமாக நீட்டுதல் (Extension)

கையைக் கீழ்ப்புறமாக நிறுத்துதல் (Depression)

இரண்டிற்கும் உள்ள சிறு வித்தியாசம்.

ஹியூமரஸ் எலும் பின் தலைப்பாகம் பெரிதாகவும், தோள் எட்டையில் உள்ள கிளினாய்டு குழி ஆழமில்லாமல் சிறிதாக இருப்பதினாலும், மிக எளிதாக தோள் மூட்டில், மூட்டு நழுவுதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், பீமர் எனும் தொடை எலும்பின் தலைப் பாகம் சிறிதாகவும், இடுப்பு எலும் பில் உள்ள அசட்டாபுலம் குழியானது (Acatabulum பெரிதாக இருப்பதாலும், மூட்டு நழுவுதல் என்பது ஏற்படாது. 2. ajespoG (Hinge Joint)

இந்தக் கீல் மூட்டுக்கான சிறப்பு அம்சம் என்ன வென்றால், இதன் இயக்கம் ஒரே திசையில் (Diection) தான் அமையும். அதாவது ஒரு பக்கமாகத் தான் அசைக்க முடியும். இதற்கு சரியான சான்றுகளாக உள்ளவை: முழங்கை (Elbow) முழங்கால் (Knee) மூட்டுக்கள் ஆகும். (opgoo, espci (Elbow Joint)

இம்மூட்டானது மேற்புறக்கை எலும்பான ஹியூமரஸின் கீழ்ப்பாகமும், முன்கையிலுள்ள ரேடியஸ், அல்னா என்ற எலும்புகளின் மேல் பாகமும் சேர்ந்து ஏற்படக் கூடிய இணைப்பாகும். - * இம் மூட்டினால், கையை முன்புறமாக நீட்டவும்,

மேற்புறம்ாக மடிக்கவும் முடியும்.