பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

அதுபோலவே, முதுகெலும்பு மூட்டும் உள்ளது. (Vertebral Column). இம் மூட்டினால் முதுகுப் பகுதியை, முன்புறமாக வளைக்க முடியும்; பின்புறமாக வளைக்க முடியும்; பக்கவாட்டில் வளைக்க முடியும்; ஒரு சுற்று சுற்றுவதுபோல, முடிந்தவரை சுழற்ற முடியும்.

4. gp40am espco (Pivot Joint)

முளைபோல அமைந்த எலும் பின் தலைப்பகுதியில் அமையப் பெறுகிற வகையே முளை மூட்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்குச் சான்றுகள்: முதுகெலும்புத் தொடரிலுள்ள மேற்பகுதியான முதல் எலும்பு பிடர் எலும்பு (Atlas) என்பதுடன் தலைப்பகுதி வந்து சேர்வதாகும்.

இந்தப் பிடர் எலும்பும், ஆக்ஸிஸ் எனும் இரண்டாவது எலும்பும் சேர்ந்து தலையைத் தாங்கி நிற்கின்றன.

நமது தலையை நாம் நாற்புறமும் சுழற்றி வருகிற தன்மையே இதற்கு சரியான எடுத்துக் காட்டாகும்.

உடல் முழுவதற்கும் ஆதாரமாக, அடிப்படைப் பண்பாக எலும்புக்கூடு இருந்து உதவுகிறது.

அதன் ஆக்க பூர்வமான இயக்கங்களை, இயல்புகளை, இதமான அமைப்புகளை, ஏற்றமிகு சிறப்புக்களை இதுவரை நாம் அறிந்து கொண்டோம்!

எலும்புகள் மட்டும் தனியாக இயங்கிவிட முடியாது. அவற்றின் அசைவுக்கும், வலிமைக்கும், அழகுக்கும் அருகிலிருந்து, சேர்ந்து, இணைந்து செழிப்பாக உதவுவன

தசைகளே.

அத்தகைய ஆற்றல் மிகுந்த தசை மண்டலம் பற்றி அடுத்துவரும் பகுதியில் தெரிந்து கொள்வோம்.