பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 63

திரும்ப, இயங்க, முன்னேற இத்தசைகள் இனிய வழிகாட்டி களாவும் அமைகின்றன. ஒர்ஆண் உடலின் மொத்த எடையில் 1 சதவிகிதம் தசைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு பெண்ணுக்குரிய உடல் எடையில், 36 சதவிகிதம் தசைகள் இடம் பெற்றிருக்கின்றன. -

மனித உடலில் 600க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இந்த 600க்கும் மேற்பட்ட தசைகள், உடலில் உள்ள 206க்கும் மேற்பட்ட எலும்புகளுடன் இணைந்து கொண்டு, எழிலாக செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தத் தசைகளின் சிறப்பு பற்றி ஒர் ஆய்வறிஞர் கூறுகிறார். ஒர் ஆணின் - நன்றாக வளர்ச்சியும் வலிமைப் பெருக்கும் நிறைந்த தசைகளுக்கு ஏற்படுகிற சக்தியினால், கடன் எடையைக் கூடத் தூக்கி விட முடியும்.

இதிலிருந்து நமது தேகத்தின் தசைகளுக்குரிய வலிமையையும் வல்லமையையும் நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!

தசைகளும் பிரிவுகளும்

தேகத்தில் உள்ள தசைகள் எல்லாம், அவை செய்கிற வேலை அடிப்படையில், 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருக் ன்ெறன. -

1. Qu gang&air (Voluntary Muscles) 2. இயங்கு gangasi (Involuntary Muscles)

3. Q3;ug, cog (Cardiac Muscle) 1. இயக்குத் தசைகள்

நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு, இயக்கப்படுகின்ற கைளே இயக்குத் தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.