பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கைகளிலும் கால்களிலும் காணப்படுபவைகள் நீண்ட தசிைகள் ஆகும்.

நடு உடலில் காணப்படுபவை அகன்ற தசைகளாகும்.

விலா எலும்புகளிலும் மற்றும் முள்ளெலும்புகளிலும் காணப்படுபவை குட்டைத் தசைகளாகும். s

இவ்வாறு அமையப் பெற்ற எல்லாத் தசைகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுக்களோடு இணைந்து, இயக்கங்களில் பெரும்பங்கு கொள்கின்றன.

அதாவது தசைகள் சுருங்குகிற போது, மூட்டுக்கள் இயங்குகின்றன. இயக்கப்படுகின்றன.

இது எப்படி என்றால், தசைகளின் இறுதி முனையிலே இருக்கின்ற அடர்த்தியான இழை இணைப்புத் திசுவால் ஆன நாண்களால், எலும்புகளுடன் இறுக்கமாகப் பொருந்தி இருப்பதால் தான், அவை எலும்புத் தசைகள் என்ற பெயர் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு எலும் புத் தசையிலும் தசை இழைகள் உண்டு. இணைப்புத் திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் உள்ளன.

இந்தத் தசைகள் இரத்த நாளங்களிலிருந்து இரத்தத்தைப் பெற்றுக் கொண்டு, தங்களிடமுள்ள கழிவுப் பொருட்களை வெளியே அனுப்பி விட்டு, அடிக்கடி தூய்மை அடைந்து கொள்கின்றன. -

தசைகளுக்கும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் நேரடியான இணைப்பு ஒன்று உண்டு. இந்த நேர்த்தியான அழைப்பு எப்படி அமைந்திருக்கின்றது என்றால், ஒவ்வொரு தசையிலும் இயக்க நரம்பு இழை என்றும், உணர்வு நரம்பு இழை என்றும் இரண்டு வித நரம்புத் தொடர்கள் இருக்கின்றன.