பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 67

தசைகள் இயங்கும் விதம்

ஒரு தசைக்கு இரண்டு நிலை உண்டு. ஒன்று தொடக்கம் @ugsrl_fraugy (vplqasq (Orgin and Insertion).

தசையின் தொடக்கம் என்பது, தசை சுருங்கி இயங்குகிற போது, அசையாது நிலையாக இருக்கிற தசையின் நுனியைக் குறிப்பதாகும்.

தசையின் முடிவு என்பது, தசையின் அசைகிற நுனிபாகத்தை முடிவு என்கிறார்கள்.

இப்படி ஒரு நுனியில் நிலையாக இருந்து, மறு நுனியில் அசைகிற வேலையை அனுசரித்து இயங்கும் தசைகளை இரண்டு விதமாகப் பிரித்துக் காட்டுவார்கள் ப்ேராய் வாளர்கள்.

1. அகோனிஸ்ட் தசைகள் (Agonist) - 2. ஆன்டகானிஸ்ட் 5ags6ir (Antogonist)

ஒரு தசை அசைந்து இயங்குகிறபோது. அந்த அசைவில் பங்கு பெறுகிற தசையை அகோனிஸ்ட் என்பார்கள்.

ஒருதசை அசைந்து இயங்குகிறபோது, அந்த அசைவுக்கு எதிராய் செயல்படும் தசையை ஆன்டகானிஸ்ட் என்பார்கள்.

உதாரணமாக, நடு உடலை நாம் முன்புறமாக வளைக்கும் போது, எல்லாவிதமான தசைகளும் ஒரு சேரப் பங்கு பெறுகின்றன. பணியாற்றுகின்றன. இந்தத் தசை களையே அகோனிஸ்ட் என்கிறார்கள்.

ஆனால், நடு உடலை நீட்டுகிறபோது, பலதரப்பட்ட தசைகள் பங்கு பெறுகின்றன. அதாவது மடக்கு தசைகள் கருங்குகிற சம்யத்தில், மற்ற நீட்டு தசைகள் விரிந்து கொள்கின்றன. இப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்மாறாக