பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 5

மானிட உடலமைப்பும் உடல் இயக்கமும்

உடலமைப்பு நூல் - ஒரு விளக்கம்

மாட்சிமை நிறைந்த மானிட உடலமைப்பிலே, மறைந்து கிடக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் ஆய்வுக்கு அடங்காதவையாகும். -

மணற்கேணியில் தோண்டத் தோண்ட சுரக்கும் சுவை நீர்போல, மானிட உடலமைப்பினை ஆய்வு செய்யும் பொழுதெல்லாம், அதன் அற்புத அமைப்பானது, அரிய பெரிய உண்மைகளையும் அளப்பரிய தத்துவங்களையும் புதிது புதிதாக நமக்குக் காட்டி வருகின்றது. நளினமான உடலின் மேன்மைத் தன்மைகள், நமது எண்ணங்களில் இனிமையாய் மீட்டுகின்றன.

அப்படிப்பட்ட அருமையான உடலமைப்பு, அந்த உடலிலே உறைந்து கிடக்கும் உள்ஸ்ரீப்புக்களின் அமைப்பு, அவைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, ஒருங்கிணைந்தும் ஒன்றித்தும் உறுதுணையாயும் இருந்து செயல்படுகின்ற தன்மைகள், அவற்றின் இயல்புகள், இதமான இடங்கள் பற்றி விளக்கிக் கூறுகின்ற நூலினைத்தான் உடலமைப்பு நூல் (Anatomy) என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். - - - -

Anatomy என்று கூறப்படும் ஆங்கிலச் சொல்லானது,

Anatome என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும். வாழும் உயிரினங்களின் உடலமைப்பைத் தெரிந்து கொள்ள,