பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இயங்கி, ஒரு சீரான இயக்கத்தை உண்டுபண்ணுவதால், இந்த எதிர்மாறான தசை விளைவை, ஆண்டகானிஸ்ட் என்று அழைக்கின்றார்கள்.

இவ்வாறு, பல தரப்பட்ட, பல திறப்பட்ட தசைப் பகுதிகள் சுருங்கி விரிகிற இயக்கங்கள், ஒரு குறிப்பிட்ட முறையில், ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் நடைபெறு கின்றன. அந்த இயக்கமானது நரம்பு மண்டலத்தாலேயே நன்றாக நடத்தப்படுகின்றது.

இவ்வாறு தசைகள் இயங்குகின்ற இயக்கத்தின் பொதுவான வகைகள் என்று பிரித்துக் காட்டியிருக் கின்றார்கள். அவை நீட்டல், மடக்கல், மைய அசைதல், பக்க அசைதல், சுழலுதல் என்பவையாக இருக்கின்றன.

இவ்வாறு, தசைகள், இயங்கி, திறமையுடன் தேகம் செயல்பட உதவுகின்றன. ஒத்துழைக்கின்றன. ஒப்பற்ற முறையில் பணியாற்றுகின்றன.

தசை இயக்கத்தின் வகைகள் (Contraction)

தசை இயக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதை இன்னும் சற்றுத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முன் பிரிவில் முடிவு என்றும் தொடக்கம் என்று கூறியிருந்தோம். அதற்கு, இங்கே இன்னும் சற்று விரிவான விளக்கம் அளிப்பது, வேண்டியதாக இருப்பதால், எழுதியிருக்கிறோம்.

பொதுவாக, ஒரு தசையின் நுனியானது எலும்பொன்று டன் தசை நார்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு முடிவு (Insertion) அல்லது இணைப்பு என்கிறோம்.