பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 69

அதே தசையின், அடுத்த நுனியானது இன்னொரு எலும் புடன் இணைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குத் தொடக்கம் (Orgin) என்று பெயர். -

இவ்வாறு இணையப்பெற்ற ஒர் இணைப்பை அல்லது ஒரு மூட்டை இயக்கிட, தசைகள் ஜோடியாக இணைந்தே செயல்படுகின்றன. -

நாம் நமது ஒரு கையை மடக்கும்போது, ஒரு தசை சுருங்குகிறது. அதாவது அளவில் குட்டையாகிறது. அதே சமயத்தில், இன்னொரு தசையானது தளர்கிறது. அதாவது அளவில் நீளமாகிவிடுகிறது.

இவ்வாறு ஒரு இயக்கத்தில், ஒரு தசை நீண்டு ஒரு தசை குட்டையாகிப் போவதையே தசை இயக்கம் என்கிறோம்.

இவ்வாறு இயங்குகின்ற விதத்தை 3 பிரிவாகக் கூறுவார்கள். -

1. நிலையான நீளாத இயக்கம் (isometric). 2. நீள்கிற இயக்கம் (Eccentric). 3. (56.55p Quib (Concentric). நிலையான இயக்கம் என்பது, நீளாமலும், குட்டையாக மலும், ஒரே நிலையில் இருந்து இயங்குவதாகும்.

உதாரணம், நாம் நமது உள்ளங்கையை சுவற்றில் வைத்து அழுத்திப் பயிற்சி செய்வது (படம் பார்க்க) -

நீள்கிற இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தசைகளை நீட்டிக்கிற செயலாகும். -

உதாரணம், கையில் ஒரு எடைக் குண்டை எடுத்து, கையை மடித்தவண்ணம் வைத்திருந்து, அப்படியே கீழ்நோக்கிக் கையைக் கொண்டுவருதல்; அப்பொழுது தசைகள் நீளமாகி வருவதைக் காணலாம்.