பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 71

தசைச் சோர்வு (Museular Fatigue)

தசைகள் வேலை செய்யத் துணை நிற்கின்றன. என்றாலும் தசைகளால், இடைவிடாமல் தொடர்ந்து வேலை செய்ய இயலாது.

ஒய்வு பெறாமல், தொடர்ந்து தசைகள் பணியாற்றுகிற போது, அவை தமது திறமையை இழக்கின்றன. சரியாக வேலை செய்ய முடியாமல் தடுமாறுகின்றன. தத்தளித்துப் போகின்றன.

அதனால்தசையின் பலம் குறைகிறது. சுருக்க அசைவின் விசையின் வேகம் குறைகிறது. தசைக் கிளர்த்தலின் கால அளவும் நீடிக்கிறது.

இதையே தசைச் சோர்வு என்று அழைக்கின்றார்கள் இதற்கான காரணம் தெரிகிறது. எப்படி அது ஏற்படுகிறது

என்கிற மாற்ற விளைவுகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம். * --

தசைகள் செயல் புரிவதற்காக இயங்கும் போது, தசைகளுக்கு உள்ளேயிருக்கும் உயிர்க்காற்று தீர்ந்து போகிறது. இதை ஆக்சிகரணம் என்பார்கள். அதனால் கரியமில வாயுவும், லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் உண்டாகின்றன. -

இத்தகைய கழிவுப் பொருட்கள் தசைத் திசுக்களில் தங்கி விடுகின்றன. வெளியேற்றப்படாத கழிவுப் பொருட்கள் தாம், தசைகளுக்கு வேதனையை உண்டு பண்ணுவதுடன், சோர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன.

கழிவுப் பொருட்கள் மிகுதியாகும்போது, அவை நரம்பு கேந்திரத்தைத் தாக்கிவிடவே, அவைகள் இணைந்துள்ள தசைகளில் தூண்டல் தன்மை குறைகிறது. அதனால் தசை இயக்கத்தில் பலமும் வேகமும் குறைகிறது.