பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தேங்கிய கழிவுப் பொருட்களைத் தேகத்தை விட்டே அகற்றுவதற்கு, மீண்டும் அதிகமான உயிர்க்காற்று தேவைப்படுகிறது. * *

சிறிது நேரம் வேலையை நிறுத்தி ஒய்வு கொடுத்தால், அந்தச்சோர்வு நீங்கிப்போகும். எப்படி? கழிவுப் பொருட்கள் இருக்கும் இடத்திற்கு இரத்த ஒட்டம் சென்று, உயிர்க்காற்றைக் கொடுத்து விட்டு, கழிவுப் பொருட்களைக் கொண்டு வந்து விடுகின்றன. -

ஆகவே, உயிர்க்காற்றைப் பெற்றுக் கொண்ட தசைகள், உற்சாகத்துடன், சோர்வு நீங்கி, மீண்டும் வலிவோடும் பொலிவோடும் பணியைத் தொடர்கின்றன.

எப்பொழுதும் தசைச் சோர்வு ஏற்படாமல், பக்குவமாகப் பணியாற்றுவோர், புத்திசாலிகள் என்று போற்றப்படுவர்.

S6DSU CPP.Cu (Muscle pull)

தசைகளைத் திடீரென வேகமாகப் பயன்படுத்தும் பொழுது தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது.

தசைகளைப் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி, அவற்றின் விறைப்பான இறுகத்தன்மையை இளகச் செய்து பயன்படுத்த வேண்டும். அதைத்தான் பதப்படுத்துதல் (Warmingup) என்பார்கள். -

தசைப்பிடிப்பு ஏற்பட்டவுடன், செயலைத் தொடராமல் நிறுத்திவிட வேண்டும். -

3. sams zgs (Muscle cramp)

தசைகளைத் பக்குவ முறையுடன் பதப்படுத்தாமல், திடீரென வேகமாக இயக்கும்போது ஏற்படுகிற வேதனை தான் இந்தத் தசைச் சுளுக்காகும். -