பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பிளந்து ஆய்வு செய்யும் முறை என்னும் அர்த்தத்தில் இந்த சொல் உருவாகியிருக்கிறது. உதாரணமாக, எலும்புகள், தசைகள், இருதயம், மூளை, தண்டுவடம் போன்ற உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்றி விளக்கிக் கூறுவதாகும். உடல் இயக்க நூல்

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் உறுப்புக்கள் உண்டு. அவற்றிற்கான சிறப்பான இயக்கங்களும் உண்டு. எந்தெந்த உறுப்புக்கள், எந்தெந்ததன்மையில், எப்படி எப்படி இயங்குகின்றன. அவற்றின் அரிய பாகங்கள் என்னென்ன? அவற்றின் சீரான செயல் முறைகள் என்ன என்பனவற்றை விளக்குகின்ற நூல்தான் உடல் இயக்கநூல் (Physiology) என்று அழைக்கப்படுகிறது. -

Physiology என்ற சொல், இரு கிரேக்க சொற்களி லிருந்து உருவாகி வந்திருக்கிறது. -

Physis என்றால்தன்மை என்றும், Logos என்றால் சொல் என்றும் பொருள்படும். அதாவது, உடல் உறுப்புக் களான தசைகள், இருதயம், மூளை, தண்டுவடம் போன்ற பல உறுப்புக்களின் செயலாற்றல் பற்றி விளக்கிக் கூறுவதுதான் உடல் இயக்க நூலாகும்.

உடலமைப்பு, உடல் இயக்கம் என்றவுடன், மானிட உடலுக்கு மட்டும் இது பொருந்தாமல், விலங்கு உடலுக்கும் பொருந்துவதாக அமைவதை, நீங்களும் உணரலாம்.

உயிருள்ள ஜீவராசிகளைப்பற்றி நாம் அறியும் பொழுது, அவற்றிற்கான சில குணாதிசயங்கள் இருக்கின்றன. அந்தத் தன்மைகளைக் கொண்டு உயிருள்ளவை, உயிரற்றவை என்று நம்மால் பிரித்தறிய முடிகிறது.