பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கொன்று குவிக்கவும், உடலை உரமாகக் காத்து நிற்கவும் உதவுகின்ற பணியில் இரத்தம் உழைத்துக்காக்கிறது.

இரத்தத்தின் பணிகள்

1. நுரையீரல் நொடிக்கு நொடி பெற்றுக் கொண்டிருக் கின்ற உயிர்க்காற்றை (Oxygen) நுரையீரலிலிருந்து பெற்றுக் கொண்டு, அதனை உடலில் உள்ள செல்கள் அனைத்துக்கும் இரத்தம் எடுத்துச் செல்கிறது.

2. அவ்வாறு சென்று கொடுத்து, வெறுமனே திரும்பி வராமல், செல்களில் செயல்பட்டதால் தேங்கிக் கிடக்கும் கரியமில வாயு, லேக்டிக் அமிலம், போன்ற் கழிவுப் பொருட்களையெல்லாம் விரைந்து வெளியே கொண்டு வந்து விடுகிறது. கரியமில வாயுவை நுரையீரல்களுக்கும் கழிவுப் பொருட்களையெல்லாம் விரைந்து வெளியே கொண்டு வந்து விடுகிறது. கரியமில வாயுவை நுரையீரல்களுக்கும் கழிவுப் பொருட்களை உரிய கழிவு மண்டலப் பகுதிகளுக்கும் கொண்டு போய் கொடுத்து விடுகிறது.

3. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன் களையும் உடலின் பல பாகங்களுக்கும் கொண்டு போகிறது. அத்துடன், இரத்தமானது தனது திரவத் தன்மையின் செழுமையை சீராகக் காத்து, உடம்பிலுள்ள உஷ்ணத்தின் உரிய அளவை ஏறாமலும் மாறாமலும் காக்கின்ற கடும் பணிகளையும் ஆற்றுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, உடலைப் பாதுகாக்கிறது. பத்திரமாகக் காத்து, பலப்படுத்துகிறது.

இரத்தம் வகையும் தொகையும்

சராசரி ஒரு மனிதன் உடலில், 5 லிட்டர் இரத்தம் இருக்கிறது என்றும், சராசரி ஒரு பெண்ணின் உடலில்