பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 79

ஆணைவிட 5% குறைவாக உள்ளது என்றும் கணக்கிட்டிருக் கின்றார்கள்.

இரத்தமானது ஒருவரது உடல் எடையில் /, பாகம் உள்ளது. மொத்த இரத்தத்தில் 45 விகிதம், சிறப்பான செல்கள் சூழ்ந்திருக்கும் அரிய கருவூலமாக அமைந்திருக்கிறது. அவை சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளாஸ்மா எனும் மஞ்சள் திரவமாகும். மீதி 56 சதவிகிதம் திரவமாகவே அமைந்துள்ளது.

இரத்த அணுக்கள் மிகவும் நுண்ணிய வடிவமைப் புள்ளவையாகும். அவை ஒரு துளி இரத்தத்தில், சிவப்பணுக் கள் என்றால் 250, 000, 000க்கு மேலும்; வெள்ளை அணுக்கள் என்றால் 400,000க்கு மேலும் இருக்கின்றன என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.

ώση σωrύωσ

பிளாஸ்மா என்பது மஞ்சள் வண்ணத்தில் அமைந்த நீர்ப்பகுதியாகும். காரத்தன்மை கொண்ட பிளாஸ்மாவானது, 90 சதவிகிதம் தண்ணிரும், 8 சதவிகிதம் புரோட்டின் சத்தும், மீதி 2 சதவிகிதத்தில் உப்புக்கள், உணவுச் சத்துக்களும், நைட்ரஜன் பொருட்களும், கரைக்கப்பட்ட வாயுக்களும், ஹார்மோன் சத்துக்களும், நோய் எதிர்ப்பு அணுக்களும், என்சைம் வைட்டமின் சத்துக்கள் போன்றவை அடங்கிய தாகவும் அமைந்துள்ளது.

இரத்தத்தில் 3 லிட்டர் அளவுக்குமேல் பிளாஸ்மா உள்ளது. பிளாஸ்மாவில் மூன்றுவகையான முக்கிய பொருட்கள் உள்ளன. அவை ஆல்புமின் (Albumin); (o,Gavrya Sar(Globeulin); oogolul stf Ganrif@sgeir (Fibrinogan).

இரத்த அழுத்தச் சக்தியை அதிகப்படுத்தி, கழிவுப் பொருட்களை எடுத்து அகற்றுகின்ற பணியை ஆல்புமின்